தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சிவகுமாருக்கு மகன்கள் மட்டுமல்லாமல் பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் சிவகுமாரின் கேரக்டர் பற்றி அவரின் அத்தை மகள் பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், சொந்த ஊருக்கு வந்தால் சிவகுமார் எப்படி இருப்பார், பேசுவார் என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.