ராஜா ராணி 2 சீரியல் நடிகைக்கு காதல் தோல்வி?…. காரணம் யார் தெரியுமா?…. தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. மிகுந்த விறுவிறுப்புடன் பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றுதான் ராஜா ராணி 2. கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது அதன் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் குடும்ப கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக டிஆர்பி யில் முதலிடத்தில் உள்ளது. இதில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை நினைவாக கொண்டு போராடும் பெண்ணின் கதை ஒரு பக்கமும், மறுபக்கம் தனது மனைவியை எப்படியாவது ஐபிஎஸ் ஆக்கிவிட வேண்டும் என்று கணவரின் துடிப்புடன் சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடித்து வருகிறார். சந்தியா கதாபாத்திரத்தில் முதலில் ஆலியா நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்திருக்கும் நிலையில் ஆலியா மானசாவிற்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சீரியலில் காமெடி வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அர்ச்சனா சமீபத்தில் சீரியலில் இருந்து விலகினார். இந்நிலையில் சந்தியாவாக நடித்து வரும் ரியாவின் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலை ரியா காதலித்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியான நிலையில் இருவரும் தங்களுடைய காதல் குறித்து எந்த ஒரு தகவலையும் இதுவரை கூறவில்லை. இந்நிலையில் ரியா சோகமான காதல் தோல்வி ஸ்டோரிகளை பகிர்ந்து வருகின்றார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கும் விழாவிற்கும் பிரேக்கப் ஆகிவிட்டதா அல்லது விஷால் ரியாவை ஏமாற்றி விட்டாரா என்று ரியாவின் ஸ்டோரியை பார்த்து பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இருந்தாலும் ரியா தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வராத நிலையில் விரைவில் அதற்கான பதிலை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.