தெலுங்கு நடிகர் கிருஷ்ணன் ராஜு மறைவு…. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபாஸ்…. கலங்க வைக்கும் வீடியோ….!!!

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகரான கிருஷ்ணன் ராஜு நேற்று காலமானார். நடிகராக மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தனது நடிப்பிற்காக நந்தி விருது மற்றும் ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

தெலுங்கு திரை உலகில் கதாநாயகனாக நுழைந்த இவர் வில்லனாகவும் வளம் வந்தார். இவர் இதுவரை 183 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றின் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரின் உடலுக்கு தெலுங்கு திரைப்பட துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பாகுபலி புகழ் பிரபாஸ் கிருஷ்ணன் ராஜு உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவருக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் நடிகர் மகேஷ்பாபு ஆகியோர் ஆறுதல் கூறினர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.