தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தற்போது தமிழ் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார்.தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் இணைந்து ஜபான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 165 கோடி ரூபாய் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி 20 நாள் கால்ஷுட்டிற்கே 10 கோடி ரூபாய் நயன்தாரா சம்பளம் வாங்குகிறார்.இதன் மூலமாக தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக நயன்தாரா மாறி உள்ளார்.அதனைப் போலவே பிராண்டு ஒப்பந்தங்களுக்காக 5 கோடி ரூபாய் சம்பளமும் வாங்குவதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இரண்டு ஆடம்பர வீடுகள், சென்னையில் 4 BHK வீடுகள், இந்தியா முழுவதும் பல குடியிருப்புகளை சொந்தமாக வைத்துள்ளார். அவரது இரண்டு சென்னை வீடுகளில் ஒவ்வொன்றுக்கும் 100 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட நயன்தாரா ஒரு தனியார் ஜெட் ஒன்றை வாங்கினார்.

நடிப்பையும் தாண்டி பல தொழில்களில் நயன்தாரா முதலீடு செய்து அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார். சொகுசு கார்களை பொறுத்தவரையில் 74.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் , 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜி எல் எஸ் 350 டி, டொயோட்டோ இன்னோவா கிரிஸ்டா போர்டு எண்டேவர் மற்றும் பிஎம்டபிள்யூ 71 சீரிஸ் உள்ளிட்ட பல கார்களையும் வைத்துள்ளார்.