விக்ரம் 100-வது நாள் கொண்டாட்டம்…. ரசிகர்கள் செய்த செயலால் திடீரென கோபப்பட்ட கமல்ஹாசன்…. அப்படி என்ன செய்தாங்க தெரியுமா…..????

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தத் திரைப்படம் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து கலக்கி இருந்தார். அது மட்டுமல்லாமல் காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில்,காயத்ரி மற்றும் ஷிவானி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு கமல் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூலிலும் பல சாதனைகளைப் படைத்தது. இதனிடையே விக்ரம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நூறாவது நாளை கடந்தது.

தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் விக்ரம் திரைப்படம் கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கோவை கேஜி திரையரங்கில் விக்ரம் படத்தில் நூறாவது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிறப்பு அலங்கார வளைவுகள் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கமலஹாசன் உள்ளே நுழையும் போது நிறைய புகை மூட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க மலர் தூவப்பட்டது. திடீரென அவர் மீது மலர் தூவியதால் கமல்ஹாசன் கோபப்பட்டு சென்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.