பிரபல தொலைக்காட்சி நடிகையான நிஷி சிங் உடல் நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இதனிடையே பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் தனது 50 வயதில் இவர் காலமானார்.

இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்ட காரணத்தால் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதே சமயம் உடல் நல பிரச்சனைகளுடன் போராடி வந்த இவர் கடந்த மே மாதம் மீண்டு வந்தார்.

இதனிடையே மீண்டும் உடல் நலக்குறைவை ஏற்பட்டு இவர் உயிரிழந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.
