கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை…. நடந்து முடிந்த Baby Shower Function…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே அக்ஷயா.இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் கதாநாயகிக்கு இணையாக தனது அசாத்தியமான நடிப்பால் பலரையும் மிரட்டியுள்ளார்.

இவரின் வில்லங்கத்தை பார்த்து ஒருபுறம் ரசிகர்கள் திட்டி தீர்த்தாலும் இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் அக்ஷயா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அண்மையில் இந்த விஷயத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து புகைப்படத்தை வெளியிட்ட இவர் baby showerநிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்