விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சிவாங்கி. இவர் சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்கள்.இவர் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மேடை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களிலும் சில பாடல்களை தற்போது பாடி வருகின்றார்.

இவரின் குழந்தைத்தனமான பேச்சுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமைதான். சினிமாவில் பல பாடல்களை பாடிவரும் இவர் சிவகார்த்திகேயனின் தான் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் சில நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தாளராக பங்கேற்று வருகிறார்.

இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தில் சிவாங்கி நடித்திருந்தார்.அதனைப் போலவே வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் நடித்த பெரும்பாலான காட்சிகளை படக்குழுவினர் கட் செய்து விட்டனர். ஏனென்றால் சிவாங்கிக்கு நடிப்பே வரவில்லை என படக் குழு கடுப்பானாலும் அவர் செய்யும் அளப்பறை தாங்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

22 வயதை ஆன இவர் பயங்கர விளையாட்டுத்தனமானவர் என்பது பலரும் அறிந்தது தான். ஆனால் அனைத்திலும் இவர் செய்யும் அலப்பறை தான் பெரிதாக உள்ளது. அதாவது சிவாங்கி தனக்கான மேக்கப் மேடை அவரே கூட்டி வந்துள்ளார். அவருக்கு ஒரு நாள் சம்பளம் மட்டுமே 14000 ரூபாய்.பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ள சிவாங்கி காஸ்ட்யூம் சரியில்லை என நிறைய குறைகளையும் கூறி வருகிறாராம்.

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் ஒரு டிரஸ் பிடிக்கவில்லை என்று படப்பிடிப்பிலிருந்து சட்டென கிளம்பி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனாலையே அன்று நடைபெற இருந்த படபிடிப்பு இவரால் தடைப்பட்டது. இவ்வாறாக தினம் தோறும் ஒவ்வொரு ஏழரை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.அதனாலையே இவரை வைத்து எப்படி படம் செய்வது என்று தயாரிப்பாளர்கள் அனைவரும் விழி பிதுங்கி உள்ளனர்.