நடிகர் சூரிக்கு புதிய சிக்கல்…. நோட்டீஸ் அனுப்பிய வணிகவரித்துறை…. நடந்தது என்ன….????

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பிறகு சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதுவரை பல்வேறு காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது ஹீரோவாகவும் அவதாரம் இருக்கிறார்.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அப்படத்தில் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சூரி மற்றும் அவரின் சகோதரர்களுக்கு சொந்தமான உணவகம் என பல்வேறு இடங்களில் அம்மன் உணவகம் என்ற பெயரில் பல ஹோட்டல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மதுரையில் தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ் லைன், நரிமேடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள உணவகங்களில் உணவு தயாரிப்புக்கான பொருட்கள் மொத்தமாக வாங்கும் கடைகளில் முறையாக ஜிஎஸ்டி செலுத்தி உரிய ஆவணங்கள் இன்றி பொருட்கள் வாங்கப்பட்டதாக வணிகவரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பெயரில் மதுரையில் உள்ள அம்மன் உணவகங்களில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பொருட்கள் வாங்கியதில் வரி ஏய்ப்பு நடைபெற்று இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தமாக பொருட்கள் வாங்கியதில் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் பொருட்கள் வாங்கி இருப்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் உணவாக உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு வணிகவரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.