தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன்பு சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியான நிலையில் அதில் திரிஷா கதாபாத்திரத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இதனைத் தவிர இவர் நடித்துள்ள ராங்கி உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளது.

இதனிடையே 39 வயதாகியும் தற்போது வரை திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனிடையே 40 வயத நெருங்கிக் கொண்டிருக்கும் திரிஷா இன்னும் 18 வயது பெண் போலவே காட்சியளிக்கிறார். இவ்வளவு அழகா இருக்க என்ன காரணம் என்று பலரும் த்ரிஷாவிடம் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அச்சு அசல் த்ரிஷாவைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.