தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகளும் உள்ளார். இதனிடையே விவாகரத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் உடன் கௌதமி கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன் பிறகு அவரிடம் இருந்தும் பிரிந்து விட்டதை பற்றி முறைப்படி அறிவித்தார்.

இந்நிலையில் கௌதமியின் மகள் சுப்புலட்சுமி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.அதற்கான முயற்சிகளில் கௌதமி ஈடுபட்டு வருவதாகவும் பல செய்திகள் அடிக்கடி வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனிடையே கவுதமியின் மகள் சுப்புலட்சுமி லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கௌதமியின் மகளா இது?ஹீரோயினி போல் இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
