சினிமாவை விட்டு விலகிய பெப்சி உமா…. உண்மை காரணம் என்ன?…. அவரே சொன்ன பதில்….!!!!

தொகுப்பாளினி என்று சொன்ன உடனே அனைவர் நினைவிற்கும் வருவது பெப்சி உமா தான். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் பள்ளிப்பருவ காலத்திலேயே தொகுப்பாளனியாக அறிமுகமாகிவிட்டார். முதன்முதலாக தூர்தர்ஷணில் ஒளிபரப்பான வாங்க பழகலாம் என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய இவர், கிட்டத்தட்ட நூறு எபிசோடுகளை தாண்டி வெற்றி அடைந்த பின்பு பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆனால் இந்த வாய்ப்பை ஏற்பதற்கு முன்பு பல கண்டிஷன்கள் இவருக்கு போடப்பட்டது. அதாவது தன்னுடைய உடை, மேக்கப் மற்றும் தான் பேசக்கூடிய ஸ்டைல் உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளனர்.அதற்கெல்லாம் இவர் சம்மதம் தெரிவித்த பிறகு தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கி சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அதற்கு முக்கிய காரணம் அவர் அணிந்து வரும் புடவை மற்றும் ஹேர் ஸ்டைல் தான்.

அவர் பேசும் விதம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும். கிட்டத்தட்ட 15 வருடங்களாக பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இவ்வாறு வெற்றிகரமாக நடத்தினார். அந்த ஷோவில் பெப்சி உமா கவர்ச்சி உடை அணிந்ததே கிடையாது.அது மட்டுமல்லாமல் அவர் எந்த கவர்ச்சியான பேச்சுகளையும் பேசியது இல்லை. அதன் பிறகு இவருக்கு சினிமாவில் ரஜினியுடன் முத்து திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும் முடியாது என இவர் கூறிவிட்டார்.

அதற்கு காரணம் என்னவென்றால் இவருக்கு நடிப்பது சுத்தமாக பிடிக்காதாம்.பாரதிராஜா படம் முதல் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக கூட நடிக்க வாய்ப்பு கிடைத்த போது கூட இவர் அனைத்தையும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.இதனிடையே பெப்சி உமா சினிமாவில் தலை காட்டாமல் இருப்பதற்கு பல காரணங்களும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அதற்கான காரணம் அவர் தனது கணவரின் தொழிலை கவனித்துக் கொள்வதற்காகவே சினிமாவிலிருந்து விலகியதாக அவரை கூறியுள்ளார்.