அடடே இவங்களா?….. பிக்பாஸ் வீட்டில் முதல் ஆளாக என்ட்ரி கொடுத்த விஜய் டிவி பிரபலம்…. படு குஷியில் ரசிகர்கள்…. அது யார் தெரியுமா….????

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.அதனால் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.தற்போதைய தகவலின்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் தொடங்க இருப்பதால் அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுமக்களும் கலந்து கொள்வதால் இரண்டு போட்டியாளர்கள் சாதாரணமானவர்கள் மக்களின் சார்பாக முதல் முறையாக கலந்து கொள்ள உள்ளனர்.

இதனிடையே விஜய் டிவியின் பிரபலங்கள் இரண்டு பேர் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் முதலாளாக நுழைந்து சோபாவில் அமர்ந்தபடி மைக்கில் அவர்கள் பெயர் எழுதி பக்கா பிக் பாஸ் போட்டியாளர்களாகவே பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது தொகுப்பாளினி டிடி மற்றும் பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்ரியன் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.