தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர்.

இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அதனைப் போலவே நயன்தாராவும் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனிடையே திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நயன்தாரா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் தளது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் மூன்று குழந்தைகளுடன் இருக்கின்றனர். அந்தப் பதிவை பார்த்ததும் நயன்தாரா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அதனை வெளிப்படையாக சொல்லாமல் விக்னேஷ் சிவன் இப்படி சூசகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கமெண்டு செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
