தமிழில் சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் லட்சுமி வாசுதேவன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலமே ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த சீரியலின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல சேனல்களில் அம்மா மற்றும் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிசியாக இருக்கும் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் உள்ளன.இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி வாசுதேவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ள நிலையில் அது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த வீடியோவில் தனது போனுக்கு வந்த ஒரு மெசேஜை கிளிக் செய்ததாகவும் அதனால் தனக்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து கண்ணீர் மல்க அவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இனி இதை யாரும் செய்ய வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு தனது அன்பான வேண்டுகோள்களை அவர் விடுத்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
