தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து சமந்தா சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் தனது சம்பளத்தையும் ஐந்து கோடி அளவில் உயர்த்தி உள்ளார்.

இந்நிலையில் பிரபலமாக உள்ள பான் இந்தியா நடிகைகள் குறித்து கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதில் பிரபலமான 10 நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். இந்த சாதனையை சமந்தா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள். சமந்தாவிற்கு அடுத்த இடங்கள் முறையே ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால், தீபிகா படுகோனே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
