நடிகருடன் ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகை…. 5 வயதில் பெண் குழந்தை…. முதல்முறையாக வெளியான சீக்ரெட்….!!!!

தொலைக்காட்சிகளில் சீரியலுக்கு பெயர் போன சேனல் தான் சன் டிவி.இதில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் ஹிட் கொடுக்கும். காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான சீரியல் தான் செவ்வந்தி.

இந்த சீரியலில் நடிகர் ராகவ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இவர் சினிமாத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைத் தொடர்ந்து சீரியலில் நாயகியாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். இவர் கன்னட சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவர் கேளடி கண்மணி மற்றும் மகராசி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போதைய செவ்வந்தி சீரியலில் இவர் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் திவ்யாவிற்கு திருமணம் நடைபெற்றது.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லம்மா சீரியலின் நாயகன் சித்து என்கிற ஆர்னவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் நீண்ட நாள் காதலர்கள்.

இதனிடையே திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை ஒன்று இருக்கும் தகவல் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது திவ்யா தற்போது இரண்டாவது திருமணம் தான் செய்துள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவரின் மகளின் பெயர் ஜெய்சனா. திவ்யா தன் மகளின் புகைப்படத்தை ஏற்கனவே பதிவிட்டு எனது இளவரசி என கூறி இருந்தார்.இருந்தாலும் அவரின் முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை எப்படி விவாகரத்து ஆனது எதனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.