“சிம்பு மட்டும் அப்படி செஞ்சா”….. கூல் சுரேஷ்சை விட நான் அதிகமா குரல் கொடுப்பேன்…. விஜய் பட நடிகை வெளியிட்ட வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சிம்பு.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இந்தத் திரைப்படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்புவுடன் ராதிகா, அறிமுக நாயகி சித்தி இத்னாணி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் காதல் மற்றும் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்தது.நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் படத்தின் ப்ரோமோஷனை பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமாக்கினார் கூல் சுரேஷ்.

தமிழ் சினிமாவின் குண  சித்திர கதாபாத்திரங்களில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமான கூல் சுரேஷ் சிம்புவின் தீவிர ரசிகர்.வெந்து தொலைந்தது காடு திரைப்படம் வெளியான பிறகு இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் சிம்பு மற்றும் பல குழுவினர் கூல் சுரேஷுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக சிம்புவுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க கூல் சுரேஷ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில் கூல் சுரேஷ் வீடியோவை குறிப்பிட்டு நடிகர் விஜயலட்சுமி பதிவு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில் என்னுடைய அக்கா மகள் சிம்பு வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு உதவி செய்தால் கூல் சுரேஷ் ஐ விட அதிகமாக சிம்புவிற்காக நான் குரல் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

அதாவது விஜயலட்சுமியின் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகளை கவனிக்க முடியவில்லை.அதனால் சிம்பு வீட்டிற்கு அருகே உள்ள ஜெயப்பிரதாவின் வீட்டில் அவருடைய மகள் வசித்து வருகிறார். எனவே அவருக்கு சிம்பு உதவி செய்ய வேண்டும் எனவும் கூறி விஜயலட்சுமி பதிவிட்டுள்ள ஒரு பதிவை இணையத்தில் வைரலாகி வருகிறது.