சினிமாவில் பல திறமைமிக்க நடிகைகளை நாம் பார்த்துள்ளோம். தனக்கான இடத்தை இன்றுவரை தக்கவைத்துக்கொள்ளும் நடிகைகள் ஏரளமாக உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி திறமை உள்ளது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகைகளில் ஐஸ்வர்யா ராய் ஒருவர். இவர் தமிழ், ஹிந்தி என கலக்கியவர்.

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த படமான “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தில் இவர் நடித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்நது பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனது அனைவரும் அறிந்ததே, மேலும் குரு என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றை சேர்ந்து நடித்திருப்பார்கள். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே ஒரு பெண் டிக்டாக் செய்தது வந்ததை நாம் பார்த்தோம். தற்போது அந்த பெண் ஒரு மலையாள படத்திப் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது, ஆஹா இதெல்லவா யோகம்..! என்று தான் சொல்ல வேண்டும்.