முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் பொழுதுபோக்கிற்காக செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது. அந்த புகழ் வெளிச்சத்திலேயே சின்னத்திரை, மீடியா என ரவுண்ட் வருபவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடனம் ஆடும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நடுரோட்டில் மக்களுக்கு மத்தியில் ஆடும் இந்த வீடியோ காட்சி இராயத்தில் பல நபர்கள் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ நீங்களும் அதை பார்த்து மகிழுங்க…