ஆசிரியர்ன்னா இப்படி இருக்கணும்ய்யா… இணையத்தில் வைரலாகும் பள்ளி ஆசிரியரின் செயல்…

ஆசிரியர் பணி அவர்களுக்கு வாழ்வாதாரம் என்பதை விட மாணவர்களின் வாழ்வை ஆதாரமாக்குதலான பணியாகவே இருக்க வேண்டும். களிமண்ணாய் இருக்கும் கலவையை சிலையாய் வடிக்கும் ஆற்றல் உடையவர்கள் ஆசிரியர்கள். குழந்தைகளை பெற்றோர் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர் என்றால் அந்த குழந்தையைப் பட்டை தீட்டி வைரமாய் ஆக்கி இந்த உலகத்தையே அவனுக்கு அறிமுகப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.

இந்த வீடியோவில் வரும் ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பற்றி தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறி அருமையான இயற்கை கசாயத்தை கற்றுக் கொடுக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது…