ஆர்டரை டெலிவரி செய்ய வந்த சொமோட்டா வாலிபர்.. எவ்வளவு மனவேதனையில் தவிக்குறார் பாருங்க…. வைரலாகும் வீடியோ

வீட்டில் இருந்தபடியே நமக்குப் பிடித்த ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து விட்டு ரிலாஸ்டாக இருந்தால் சொமோடா நிறுவனத்தினர் வீட்டுக்கு வந்தே டெலிவரி செய்கிறார்கள். முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போதெல்லாம் சின்ன, சின்ன நகரங்களுக்கும் கூட வந்துவிட்டது.

அதிலும் கரோனா காலமான இப்போது பலரும் வீட்டை விட்டு வெளியே செல்லத் தயங்குகின்றனர். அது மட்டும் இல்லாமல் சொமோட்டா போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களிடம் ஆர்டர் போட்டுவிட்டு ரிலாக்ஸ்டாக காத்து இருக்கின்றனர். அதே நேரம் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் தகுதி குறைவானவர்கள் அல்ல. அவர்கள் தங்கள் தகுதிக்கு ஏறற வேலை கிடைக்காததாலேயே கிடைத்த வேலைக்கு வருகின்றனர். ஆனால் அதன் மகத்துவம் தெரியாமல் அப்படி உணவுப் பார்சல்களை சுமந்து வருவோரை சிலர் எகத்தாளமாகப் பேசிவிடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான். ஒருவர் சொமோட்டாவில் ஆர்டர் போட்டிருந்தார். அந்த ஆர்டரை டெலிவரி செய்ய ஒரு இளைஞர் வந்தார். அவர் கொஞ்சம் தாமதமாக வச்ந்தார். உடனே உணவை ஆர்டர் செய்தவர் கொஞ்சம் டென்ஷனாகிப் பேசினார். உடனே, அந்த இளைஞரை சரமாரியாகத் திட்டினார். உடனே டெலிவரி செய்ய வந்தவர் வழியெல்லாம் கொரோனா இருக்கிறது. அதனால் தான் வர லேட் ஆகிவிட்டது என்கிறார். உடனே அதை சம்மதிக்காமல் மீண்டும் திட்டிவிட்டு, பார்சலையும் வாங்காமல் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் செல்போனில் வீடியோவாக எடுத்தார். அந்த இளைஞரிடம் சொமோட்டா டெலிவரி பாய், ‘நானும் எம்.பி.ஏ பட்டதாரி தான். கஷ்டப்பட்டு தான் ஆர்டர் எடுக்குறேன். ஒரு பார்சலுக்கு 20 ரூபாய் கிடைக்கும். எனக்கு பாராட்டு வேண்டாம். திட்டாமல் இருக்கலாமே! ‘’ என உருக்கமாகப் பேசுகிறார் அந்த சொமோட்டா டெலிவரி பாய்!