இன்ப அதிர்ச்சியால் கண்ணீர் விட்டு கதறி அழுத சஞ்சீவ்.. அப்படி என்ன சர்பரைஸ் தெரியுமா? வைரலாகும் வீடியோ இதோ..

விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் ‘செம்பா’ வேடத்தில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் பெற்றோரிடம் காதலை கூறும்போது சஞ்சீவ் வீட்டில் மற்றும் இவர்கள் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆலியா வீட்டில் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு ஸ்ட்டார் ஜோடிகளின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அதில் சில உணர்வுபூர்வமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. ஸ்டார் ஜோடிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சர்ப்ரைஸ்களும் வழங்கப்படுகின்றது. அந்த வகையில் நடிகர் சஞ்சிவுக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சில் அவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.