இன்றைய தலைமுறையினர் white color job யைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு விவசாயம் செய்வது ஏதோ குறைச்சலான தொழில்போல் இருக்கிறது. இவ்வளவு ஏன், இன்று விவசாயிகளாக இருப்பவர்களே தங்கள் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புவதில்லை.
இப்படியான சூழலுக்கு மத்தியில் இங்கே நாற்று நடும் பாட்டி ஒருவர், தன் பேத்தியை வயலுக்கு அழைத்து வந்து அவருக்கு நாற்று நடுவது பற்றிக் கற்றுத் தருகிறார். கூடவே நாற்றை தெய்வமாக மதித்து நாற்று நட்ட பின்னர் அதைத் தொட்டுக் கும்பிடவும் அந்த குட்டிதேவதைக்கு சொல்லிக்கொடுக்க அதுவும் அப்படியே செய்கிறது. குறித்த இந்த வீடியோ இணையத்தில் பத்துலட்சம் பேரின் மனதைக் கவர்ந்திருக்கிறது.