மக்களுக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு இருக்க தான் செய்யும் அதில் குறிப்பாக பெண்களுக்கு சீரியல் தொடர்கள் தான் அவர்களின் அன்றாட பொழுதுபோக்காக இருந்து வருகிறது.மேலும் தற்போது பல தொலைக்காட்சி நிறுவனங்கள் பல புதிதான தொடர்களை உருவாக்கி மக்களிடையே கொண்டு சேர்கிறார்கள்.

மேலும் இதற்கிடையில் எந்த சீரியல் தொடர்கள் மக்களிடையே பிரபல நிகழ்ச்கியாக வெற்றி பெற்று வருகிறதோ அதை வைத்து அதனை சார்ந்த நிறுவனங்கள் பெரும் ரசிகர்களை சேர்த்து விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் 90களின் இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.புத்தம்புதிய நிகழ்ச்சிகள் 90 காலகட்டத்தில் தொடங்கப்பட்டன, அதேபோல் சீரியல்களும் இளைஞர்களை கவரும் வகையில் சில கதைகள் இடம்பெற்றன.

அப்படி எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஒரு சீரியல் என்றால் அது கனா காணும் காலங்கள் தான். எதார்த்தமான பள்ளி பருவ கதைக்களம், இப்போது மீண்டும் இந்த சீரியலை ஒளிபரப்பினாலும் அனைவரும் பார்ப்பார்கள்.

இந்த சீரியலில் சங்கவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் மோனிஷா. பல் மருத்துவரான இவர் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக போட்ட வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
View this post on Instagram