தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பவரும் கூட சீக்கிரமாக பிரபலமாகிவிடுகின்றனர்.அந்தவகையில் பிரபலமான நடிகைதான் அம்மு அபிராமி.குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்த திரைப்படம் ராட்சசன்.தமிழில் அவருக்கு முதல் படம் இது இல்லையென்றாலும் இந்த திரைப்படம்தான் இவருக்கு கதாபாத்திர அமைப்போடு இருந்தது.

மேற்கொண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திலும் ஒரு நல்ல பாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான தம்பி திரைப்படத்திலும் நடித்து கலக்கி இருந்தார்.இந்தநிலையில் தற்போது புதிய படமொன்றில் காட்டுவாசி பெண்ணாக நடிக்கவிருக்கிறார்.

இயக்குனர் ரமேஷ் வி இயக்கும் இந்த திரைப்படத்தில் நன் மஹான் அல்ல திரைப்படத்தில் நடித்த வருண் கதாநாயகனாக நடிக்கிறார்.படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் முழுக்க முழுக்க இந்த திரைப்படம் காட்டுவாசி மக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்க்கை முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.இந்த படம் வெளியானால் தனக்கு மேற்கொண்டு பல பாராட்டுக்கள் கிடைக்கும் என கூறியுள்ளார் அவர்.