தற்போது எல்லாம் திரைபடத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் சின்னத்திரையில் வரும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் நடிகர் நடிகைகள் வெகு பிரபலமாக உள்ளார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வரும் நடிகர்கள் மக்களிடையே பலத்த வரவேற்பை பெறுகின்றனர்.

மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களாக வரும் பல நடிகர்கள் மக்கள் மற்றும் திரையுலகில் பெருமளவு வரவேற்பை அடைந்ததோடு சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடிக்கும் வாய்ப்பினையும் பெற்று வருகின்றனர்.சன் டிவியில் ஒளிபரப்பான ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விஜய சாரதி.

ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சிறப்புகளை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் கூட ரசிகர்கள் இருந்தனர்.

பின்னர் பவளக்கொடி என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் விஜய சாரதி. ஆனால் அதில் அவருக்கு பெரிதும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதன்பின், சித்தி, கோலங்கள், விக்கரமாதித்யன் போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் ஒருக்கட்டத்தில் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டது.

இந்நிலையில், இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தற்போது விஜயசாரதி இலங்கை தமிழ் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக ரீ என்ட்ரி கொடுத்துள்ளாராம்.
