பொதுவாக நடிகர் நடிகைகள் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளதை நாம் பார்த்துளோம். ஆனால், தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தான்.

பெஸ்ட்டு பெஸ்ட்டு பெஸ்ட்டு லெஜென்ட் சரவணா என்று அணைத்து தொலைக்காட்சிகளிலும் தனது கடைக்கான விளம்பரத்திற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சினேகாவில் தொடங்கி கடைசியாக ஹன்சிகா வரை ஜோடி போட்டு கலர் கலரான ஆடைகளை அணிந்து கொண்டு அனைவருடனும் இணைந்து விளம்பரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளார்.

என்னதான் அவரின் நடிப்பினை பலரும் கலாயித்து வந்தாலும் யாரு என்ன வேணாலும் சொல்லுங்க என ஆவர் போக்கில் பொய் கொண்டிருக்கிறார். கடை விளம்பரம் தொடங்கி தற்போது முன்னணி நடிகைகளோடு சேர்ந்து திரைபடித்தில் நடிக்க போகிறார் என்ற செய்திகளும் வளம் வந்தன. சரவணா அருள் தயாரித்து, நடிக்கும் இப்படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

இந்த இயக்குனர்கள் இதற்க்கு முன்பு உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இளைஞர்களுக்கு பொ.றா.மை படும் அளவிற்கு ஒன்று என்றால், இதில் நடிக்கும் ஹீரோயின்கள் தான். இந்த படத்தில் அண்ணாச்சிக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற “கீத்திகா திவாரி” என்பவர் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான போசை நடிபெற்றது, சமீபத்தில் இந்த படத்தின் படபிடிப்பு தல போட்டோஸ் வெளியாகி ட்ரென்ட்ஆனது. இந்த படத்தில் அண்ணாச்சியுடன் சேர்ந்து பிரபு, விவேக், நாசர், தம்பி ராமையா ஆகியோர் நடிக்க உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் படத்திலேயே அருள் பெரிய அடியாக எடுத்து வைக்க செய்கிறார் என பேசப்பட்டன. அதற்க்கு ஏற்றார் போலவே இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் 30 கோடி என்று கூறப்படுகிறது. முதல் படமே இத்தனை கோடி பட்ஜெடடா என்று கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் வாயை பிளந்து வருகின்றனர். தற்போது இந்த படத்திலிருந்து, சில டூயட் காட்சிகலின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.

செம்ம ஸ்மார்ட் லுக்கில் அருள் அண்ணாச்சி ஹீரோயின் கூட சேர்ந்து மலை களில் டூயட் பாடிகொண்டிருக்கிறார். அநேகமாக இது படத்தில் ஒரு பாடல் காட்சியின் பகுதியாக இருக்கலாம் என எதிர்பாக்கபடுகிறது. கூடவே நம்ம விவேக் வேற இருக்காரு பாஹ்.