விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவரின் நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர், சினிமாவில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.

இதனை தொடர்ந்து நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, சீரியல் நடிகரும் நடன இயக்குனராகவும் இருந்து வரும் யோகேஷ்வரன் என்பவரை மைனா காதலித்து வந்ததாக கடந்த சில காலமாக தகவல்கள் வெளியானது. ஆனால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு தான் பலருக்கும் தெரிந்தது.

நந்தினி மற்றும் யோகேஸ்வரனின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றுது. இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மைனா நந்தினிக்கு கடந்த 24ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. வளையகாப்பு முடிந்தவுடன் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த செல்பியையும் வெளியிட்டிருந்தார். தற்போது வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அதே கெட்டப்பில் ஆட்டம் போட்டுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram