தண்ணீரில் அம்மாவுடன் விளையாடும் சிறுவன்… பலரின் மனதை கொள்ளை கொண்ட வீடியோ..!

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே சில குழந்தைகள் செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அந்தக் குழந்தைகள் அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாகவே குழந்தைகளுக்கு தண்ணீரைப் பார்த்தால் ரொம்பவும் குதூகலமாகி விடுவார்கள்.

இங்கேயும் அப்படித்தான். தண்ணீரைப் பார்த்ததும் குழந்தைகள் செம மகிழ்ச்சியாக உற்சாகத் துள்ளல் போடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட அவர்களின் ஸ்வீட் மொமரீஸை இதோ நீங்களே இதில் பாருங்களேன்….