தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஆக்ஷன் கிங் அர்ஜூனும் ஒருவர். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சர்வைவர்” என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கராத்தேயிலும் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஆக்சன் கிங் 90 களில் பிஸியான நடிகராக வலம்வந்தார்.

ஆக்ஷன்கிங் அர்ஜூன் இப்போது சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான்பால்ராஜின் இயக்கத்தில் ப்ரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துமுடித்து சமீபத்தில் ரிலீஸானது. இதில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கியப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த ஆக்ஷன் சிங் அர்ஜூன் தன் மடியில் ஒரு சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சிறுவன் யார் தெரியுமா? அர்ஜூனின் நெருங்கிய உறவினரும், அண்மையில் மாரடைப்பால் உயிர் இழந்தவருமான புனித் ராஜ்குமார்தான். கன்னட திரை உலகில் மிகவும் பிரபலமாஅ நடிகர் தான் புனித் ராஜ்குமார். நடிப்பைக் கடந்து தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர்.

நடிகர் புனித் ராஜ்குமார் சிறுவனாக இருக்கும்போது அவரை மடியில் தூக்கி வைத்துக்கொண்டிருக்கும் படத்தை அர்ஜூன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் நடிகர் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் அவரது நினைவைப் பகிரத் தொடங்கியுள்ளார்.