நடிகர் கருணாஸ் தமிழ் சினிமாவில், ஒரு காலகட்டத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த ஒரு காமெடியனாக வலம் வந்தவர். அந்த வகையில் சொல்ல வேண்டுமானால் நந்தா, திருட திருடி, திண்டுக்கல் சாரதி, ரகளபுரம், டார்லிங் போன்ற பல படங்கள் இவரின் சிறப்பான நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

மேலும், ஒரு சில சின்ன படங்களில் கூட, கொஞ்சம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் கருணாஸ் அவர்கள். மேலும், படங்களில் நடித்து வந்தாலும் நடிகர் கருணாஸ் அவர்கள், அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். மேலும், நடிகர் கருணாஸ் மற்றும் இவருடைய மனைவி பாடகி கிரேஸ் ஆகியோருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்.

மகன் கென் கருணாஸ் அண்மையில் நடிகர் தனுஷுடன் “அசுரன்” படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் கருணாஸ் அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது கருணாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றில் அவரும் மகளும் உள்ளார், இதோ அந்த குடும்ப புகைப்படம்…
