நடிகர் சிம்புக்கு திருமணம்! ரசிகர்கள் அவருக்காக என்ன செய்தார்கள் தெரியுமா? நீங்களே பாருங்க- புகைப்படங்கள் இதோ..

எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. காதல் அழிவதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. லவ் ஆக்‌ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சிம்பு.

ஆனால் அவரின் நிஜ வாழ்க்கையில் லவ் செட்டாகவில்லை. காதல் தோல்விகளையும் சந்தித்தார். தற்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். பல சிக்கல்களை தாண்டி வந்தாலும் தொடர்ந்து அவர் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறோர். அவருக்கு எந்த சூழலிலும் அன்பளிக்கும் ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே ஆக்டிவ்வாக இயங்கிவருகிறது.

சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் இருக்கிறது. அண்மையில் சிம்புவின் அப்பா டி.ஆர் கூட சிம்புவுக்கு வரன் பார்த்து வருகிறோம், நல்ல பெண் அமைவார், திருமணம் நல்லபடியாக நடக்கும் நம்பிக்கை உள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடைபெற வேண்டும் என ரத்தினிகிரி முருகன் கோவிலும் முட்டி போட்டி மலையேறி சுவாமி தரிசனம் செய்து ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளனர்.