தமிழ் சினிமாவில் எப்பொழுதும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு பஞ்சம் இருந்தாலும் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருந்ததில்லை. இப்படி சீசனுக்கு சீசன் பொழுதும் எதாவது ஒரு காமெடி நடிகர்கள் கலக்கி வருவார்கள்.

இப்படி அறிமுகமாகும் காமெடி நடிகர்களும் திடிரென முளைத்து வருவதில்லை ஏற்கனவே பல படங்களில் துணை நடிகர்களாகவும் துணை காமெடி நடிகர்களாகவும் நடித்திருந்தால் மட்டுமே இவர்களுக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும். இப்படி வந்தவர்கள் தான் திரையுலகில் இன்று காமெடி ஜாம்பவான்களாக இருப்பவர்கள்.

தமிழ் திரையுலகில் தற்போது நடிக்கவில்லை என்றாலும், மீம் கிரியேட்டர்கள் மூலம் நம்மை நாள்தோறும் சிரிக்கவைத்து வருகிறார் நடிகர் வடிவேலு.இவர் கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இதன்பின் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் வடிவேலு, தற்போது மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வரும், நடிகர் வடிவேலுவின் குடும்ப புகைப்படங்கள் இதோ..
