அந்த காலத்து நாடக நடிகை தான் சண்முகசுந்தரி. தனது 5 வயதில் இருந்து நாடன்கங்களில் நடிக்க துவங்கினர் இவர். மேலும் இவரை எல்லோரும் அறிந்து கொள்ளும் படியாக கூறினால், பின்னணி பாடகியும், நடிகையுமான டி.கே.கலாவின் தாயார் இவர்தான். அந்த கால முன்னணி நடிகர்களான, எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் நடித்தவர் நடிகை சண்முகசுந்தரி. திரைப்படங்களில் பெரும்பாலான நடிகர்களுடன் இவர் நடித்து இருப்பது குறிபிடத்தக்கது.

இவர் சினிமா துறையில் சுமார் 45 வருடங்களுக்கு மேல் நடித்துக் கொண்டிருந்தவர். இது வரையிலும் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது. மேலும் நடிகை சண்முகசுந்தரி ஏராளமான படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்துள்ளார். இவர் எம்.ஜி.ஆருடன் இதயக்கனி, நீரும் நெருப்பும், கண்ணன் என் காதலன், என் அண் ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சிவாஜியுடன் லட்சுமி கல்யாணம்,வடிவுக்கு வளைகாப்பு படங்களிலும், ஜெமினியுடன் மாலதி படத்திலும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் ஆற்றி வந்த பணியினை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு, இவர் நாடகம் மற்றும் திரைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
இவர் வடிவேலுக்கு அம்மாவாக நடித்துள்ளார், மிடில் க்ளாஸ் மாதவன். அந்த படத்தில் வடிவேலு குடித் து விட் டு, சண்முகசுந்தரியை பார்த்து பேசும் அது வேற வாய்… இது நாற வாய் என்ற நகைச்சுவை மிகவும் பிரபலம். நடிகை சண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என்ற 5 மகள்கள் உள்ளனர். இவர்களில் டி.கே.கலா சினிமாவில் பின்னணி பாடகியா கவும்,

நடிகையாகவும் இருக்கிறார் என்பது மிக குறிப்பிடத்தக்கது. 2012 ஆம் ஆண்டு மே 1-ம் தேதி அதிகாலையின் உட ல் நலகுறைவு ஏற்பட பல நாட்களாகவே படுத்தபடுக்கையாக இருந்தவர். மரு த்துவம னை க்கு கொண் டு செல்ல நேரம் இல்லாத காரணத்தால், பா திக்கப்பட்டு இருந்த நடிகை சண்முகசுந்தரி அவர்கள் கா லமானார் இவர்.
