தமிழ் சினிமாவில் “உன்னாலே உன்னாலே” படம் மூலம் ஹீரோவானவர் தான் சண்டிகர் வினய். மோதி விளையாடு, மிரட்டல், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஷாலின் “துப்பறிவாளன்” படத்தில் நடிகர் வினய் வி ல்ல னாக நடித்திருந்தார். இதையடுத்து வெங்கடேஷ் இயக்கத்தில் தமன் ஹீரோவாக நடித்திருக்கும் நேத்ரா படத்திலும் வினய் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையி, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தில் வி ல்ல னாக நடித்திருக்கிறார் நடிகர் வினய்.

இவர் அண்மையில் டாக்டர் படம் குறித்தும், தனது வாழ்க்கை பயணத்தை குறித்தும் பேசியுள்ளார். நெல்சன்-திலீப் இருவரும் இணைந்து மிகவும் ஜாலியாக படப்பிடிப்பு நடத்தினார்கள், எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்போதே இவ்வளவு ஜாலியாக வேலை பார்க்கிறீர்கள் தொலைக்காட்சிகளில் பயணம் செய்தபோது எப்படி இருந்திருக்கும் என்று கேட்டிருக்கிறேன் என்றார்.

அதோடு சினிமாவிற்கு வருவதற்கு முன் விஸ்கி கம்பெனி, வங்கி போன்றவற்றில் பணிபுரிந்ததாகவும் ஒரு அ ரைக்குள் உட்கார்ந்து பணிபுரிய ஒரு க ட்டத்தில் விரும்பவில்லை எனவே நடிக்க வந்ததாக கூறியுள்ளார் நடிகர் வினய் அவர்கள்.
