“ஊரோரம் புளியமரம்” என்ற பருத்தி வீரன் படத்தின் கிராமிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இப்பாடலில் நடிகர் கார்த்தியுடன் ஆடிக்கொண்டே பாட்டு பாடி பிரபலமானவர் மதுரை காரியாபட்டி லட்சுமியம்மாள். நாட்டு புறப்பாட்டு, தாலாட்டு, கும்மி, ஒப்பா ரி கோவில் திருவிழா என பாடி வந்தவர் பருத்தி வீரன் படத்திற்கு பின் சினிமா வாய்ப்புகளை அதிகம் பெற்றார். இந்த படத்தினை இயக்குனர் அமீர் இயக்கிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். இந்நிலையில் 1000க்கணக்கான கட்சேரிகளில் பாடி வந்தவ லட்சுமியம்மாள், கடந்த 2016 முதல் உடல் நலக்குறைவால் பா திக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் சம்பாதித்த பணத்தை மருத்துவ சிகிச்சைக்கே செல வழித்து விட்டாராம். பின் குணமாகி விட்டார். தற்போது வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை பெறவேண்டிய க ட்டாய த்திலும், பணமில்லாமலும் த விக்கிறாராம்.

இந்நிலையில் சாப்பாடு சாப்பிடக்கூட நேரமில்லாமலும் ஓய்வில்லாலும் பாடியதால் உடல் நலம் பா திக்கப்பட்டதாகவும், முன்பு போல குரல் வளம் இல்லை என்றும், மகன்கள் சாப்பாடு போ டுவார்கள், ஆனால் சிகிச்சைக்கு பணமில்லை, வாங்கிய விருதுகளை கூட வீட்டில் வைக்க இடமில்லை என அவர் கூறியுள்ளார்.