சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில் ஒன்று என்றால் கடந்த வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது ஐந்தாவது சீசனுக்கு அடியெடுத்து வைக்கபோகும் பிரபல முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி மக்களிடையே தொடர்ந்து பார்க்கபடுவதோடு பலர் இந்த நிகழ்ச்சியின் வேறே லெவல் ரசிகர்களாக உள்ளார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்களும் மற்றும் புதுமுக நடிகர் நடிகைகளும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொள்வதோடு வெள்ளித்திரையில் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ், இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
மேலும் இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தெந்த நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5-ல் சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த சந்தோஷ் பிரதாப் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ல் கோபிநாத் ரவி என்ற மாடல் நட்சத்திரம் பிக்பாஸில் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Looking forward #GopinathRavi into #biggbosstamil5#biggbosstamil https://t.co/qnIW3pnkWU pic.twitter.com/JzsWqpC2ZZ
— Imadh (@MSimath) September 5, 2021