மகிழ்ச்சியில் மாமியாருக்காக குஷ்பு செய்த செயல்..! இன்ப அ-தி-ர்-ச்-சியில் ரசிகர்கள்..! தீயாய் பரவும் குடும்ப புகைப்படம்..

கோலிவுட் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான தர்மத்தின் தலைவன் மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும் இவர்  மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற முன்னணி மொழி சினிமா துறைகளில் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்கள் தன் வசம் ஈர்த்தார்.

மேலும் அந்த மொழியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். நடிகை குஷ்பூ அவர்கள் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களை நடித்து சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவர் 2000ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் மாமியார் என்றாலே மருமகள்களுக்கு ஆகாது என்பார்கள். ஆனால் குஷ்பு விஷயத்தில் அப்படி இல்லை. அவர் தன் மாமியாருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.புகைப்படத்தினை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,எங்கள் ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எங்களின் இதயங்களையும், இல்லத்தையும் ஆட்சி செய்பவர்.

நாங்கள் ஒரு குடும்பமாக ஒற்றுமையாக இருப்பதற்கு காரணம் அவர் தான். என் மாமியார் தெய்வானை சிதம்பரம். எங்களை வழிநடத்த நீங்கள் கிடைத்ததற்கு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். லவ் யூ அம்மா என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.