நடிகர் நகுல் தனது மனைவியின் நைட்டியை அணிந்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆகவும் பிரபலமாகவும் உள்ளனர். நகுலின் மகள் அகிராவுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.தற்போது நகுல் மகள் அகிராவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில் மகள் அணிந்திருக்கும் உடை போலவே நகுலும் உடை அணிந்துள்ளார். அதில் ஏன் அகிராவின் அம்மா மட்டும் தான் அவரைப் போல உடைகள் அணிந்துகொண்டே இருக்க வேண்டுமா? என்று தெரிவித்துள்ளார். அதாவது உடையில் பாலின பாகுபாடு இருக்க வேண்டாம் என்றும் இருபாலினத்தவர்களும் பயன்படுத்துமாறு ஆடைகள் வர வேண்டும் என்றும் நகுல் மனைவி கோரிக்கை வைத்துள்ளார்.

நகுலின் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தொலைக்காட்சி தொகுப்பாளர் சாகித்யா ஜெகநாதன் ” இது உண்மையில் அற்புதமான செயல். நகுல் தான் ஒரு ஆண் என்று கருதாமல் மனைவியின் நைட்டியைத் திருடி போட்டுக்கொள்கிறார். இந்த மாதிரியான நபர்கள் மீது அன்பு கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
View this post on Instagram