தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், இவர் நடித்த விக்டர் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு இடைவெளிக்கு பிறகு இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி தான்.

அருண்விஜய் தொடர்ந்து வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பில் அசத்தி ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வருகிறார். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான தடம் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஃபியா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பயோ பூர்த்தி செய்யவில்லை. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண் விஜய் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் தான். இந்நிலையில் செம மிரட்டலான கெட்டப் ஒன்றில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Wishing you all a happy Gandhi Jayanthi!!
Here are few pics from my new photoshoot…! ❤️
@storyteller_ind #osmanabdhulrazak @DoneChannel1 pic.twitter.com/QKHhvRobZx— ArunVijay (@arunvijayno1) October 2, 2020