தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களின் ராஜாவாக திகழ்ந்து வருபவர் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். 1994ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்தது நாட்டாமை படம். இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரது காமெடி அனைவரையும் சிரிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் இவர்களது காமெடி. அப்போது ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் போது, பெண்ணின் அப்பா உட்கார்ந்து மிக்ஸர் மட்டுமே சாப்பிட்டு கொண்டிருப்பார்.

அந்த காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.அதே காட்சியில் வரும் பெண் பற்றி யாரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவர் நாட்டாமை படத்திற்கு பின்னர் லிங்கா படத்தில் கூட நடித்து இருக்கிறார். இவர் பிரபலமானது என்னவோ நாட்டாமை படத்தின் மூலமாக இருக்கலாம். ஆனால், இவர் இந்து , சேதுபதி ஐபிஎஸ் , நம்ம அண்ணாச்சி, மே மாதம் என்று பல படங்களில் நடித்து உள்ளார். அது மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு என்று பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர்,

மீனா, ரோஜா, ரம்பா என்று பல்வேறு முன்னணி நடிகைகளில் தோழியாக நடித்திருக்கிறார். மேலும் 2000 ஆம் ஸ்ரீ ஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தி நாயுடு.

அவரும் தெலுங்கில் பல படங்களில் கதாநாயகனாக நடித்தவர் தான். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ராகுல் என்ற மகன் பிறந்தார். அவருக்கு தற்போது 18 வயதாகிறது. ஆனால், இன்றும் கீர்த்தி நாயுடு அதே இளமையுடன் இருக்கிறார் என்பது ஆச்சிரியமே.
