வில்லன் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி மகன் யார் தெரியுமா..? அசல் அப்பவ போலவே வில்லன் மாதிரி இருக்கிறார் பாருங்க..!

மகாராஷ்டிர மாநில மேடை நாடக கலைஞர் ஆசிஷ் வித்யார்த்தி, இந்தி, மராட்டியம் பெங்காலி படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து வந்தார். தமிழில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் அறிமுகமாகி இங்கு வில்லன் நடிகர் ஆனார். எல்லா முன்னணி நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தார். பின்னர் குணசித்ர வேடங்களிலும் நடித்தார். 2015ல் தனுஷ் நடித்த அநேகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார்.

ஆனால் இந்தி படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் தற்போது ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் ஆசிஷ் வித்யார்த்திக்கு இதுவரை அவர் நடிக்காத கேரக்டர் என்கிறார்கள்.

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப் மற்றும் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். தில், தூள், கில்லி, தடம் படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த நிலையில் அவரது குடும்ப புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.