அண்ணனால் 11 வயதில் 5 மாத கர்ப்பமான சிறுமி: எதிர்காலம் கருதி எடுக்கப்பட்ட முடிவு

தவறான முறையில் கர்ப்பமான 11 வயது சிறுமியின் வயிற்றில் வளர்ந்த கரு எதிர்காலம் கருதி கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, கொடைக்கானலைச் சேர்ந்த விதவை தாயின் மகள் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தச் சிறுமிக்கு அண்ணன் முறையுள்ள வாலிபர் ஒருவரின் முறைகேடான செயலால் கர்ப்பமாகியுள்ளார். அவரது கருவை கலைக்க உத்தரவிடக்கோரிக் கோரி, சிறுமியின் தாயார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகினார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, சிறுமியின் வயிற்றில் 24 வாரக் கரு உள்ளது என மருத்துவர்கள் அறிக்கை கொடுத்தனர்.

அதனடிப்படையில் கருவை கலைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்தச் சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலர் நான்கு வாரத்துக்குள் இந்தத் தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.