அந்த புகைப்படத்தை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரெஹானா மீண்டும் சபரிமலைக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு மனு – கேரள அரசு கொடுத்த பதிலடி

உலகமெங்கிலும் ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. அதிலும் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்துமதத்தில் சிறுதெய்வங்கள், பெருதெய்வங்கள் என பலவிதமான தெய்வ வழிபாடுகள் உள்ளன. ஐயப்பன் போன்ற சில தெய்வங்களை கும்பிடும் வழிமுறைகள் மிக தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இதற்கு பல புராண கதைகளும் உள்ளன. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்தவிர மற்ற அனைத்து ஐயப்பன் கோவில்களிலும் அனைவருக்கும் அனுமதி உள்ளது. ஆனால் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை பல ஆண்டுகளாக தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த வருடம் சில சமூகஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு கடந்த வருடம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் மிகப்பெரிய பேரணியெல்லாம் நடத்தினர். இதில் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களில் ஒருவர் ரெஹானா பாத்திமா. கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இவரின் ஆபாசமான புகைப்படங்களும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக இருமுடி கட்டி வந்த ரெஹானாவை போலிசார் பாதுகாப்புடன் மலைக்கு மேலே அழைத்துச்சென்றனர்.

ஆனால் அங்கும் கடும் போராட்டத்தால் பாதுகாப்பு காரணமாக கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அழைத்துச்சென்றனர். இந்நிலையில் மீண்டும் இந்த தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி தொடர்ந்த மனுவை நீதிமதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான நீதிபதிக்குழு மனுவை 7 பேர் கொண்ட சிறப்பு நீதிபதி குழுவிற்கு பரிந்துரை செய்தனர். அதுவரை பழைய தீர்ப்பின்படி பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதேநேரம் கேரள அரசு நீதிமன்ற அனுமதியுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே

கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு அளிப்போம். விளம்பர நோக்கில் வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தரமுடியாது என்று தெரிவித்துவிட்டது.  இதனால் 12 வயது பெண் உட்பட பலரை திரும்ப அனுப்பிவிட்டனர். இந்நிலையில் தற்போது மீண்டும் ரெஹானா கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு அளிக்க வேண்டும் என போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆனால் இவர் விளம்பர நோக்கில் கேட்கிறார் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.