நாட்டில் பல நல்ல விசயங்கள் நடக்குதோ இல்லையோ அதற்கேட்டாற்போல் பல சமூக சீர்கேடான விசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.பாலியல் துன்புறுத்தல்கள், கொலை ,கொள்ளை என பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது.அரசாங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தான் இருக்கிறது.ஆனால் பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துகொன்டே இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்கையில் பெண் சிசுக்கொலை ஒரு கொடுமையான விசியம், கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றழிக்கும் ஒரு இரக்கமற்ற செயல்.இந்தியாவில் கிராமம் மற்றும் நகரம் என வேறுபாடின்றி இச்செயல் நடைபெறுகின்றது.
ஆயினும் கிராமப்புறங்களில் இச்செயல் அதிகமாக நடந்து வருகிறது. நகரப்பகுதிகளில் கதிரியக்க மின்னணுக் கருவிகள் மூலம் கருவில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என அறிந்து அதனைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயல் மருத்துவ மனைகளில் நன்கு படித்த மருத்துவரால் நிகழ்த்தப்படுகிறது.
இந்த சமூக சீர்கேடான விசியங்களால் நாம் எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒரு உண்மையை இந்த காணொளி உணர்த்துகிறது.