நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் அடுத்தடுத்து பிசியாக இருப்பவர். இயக்குனர் விஜய்யுடனான திருமண விவாகரத்திற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவரின் நடிப்பில் வந்த ராட்ஸ்சன் படம் ஹிட்டாகிவிட்டது. அடுத்ததாக அவருக்கு அதோ அந்த பறவை போல, ஆடை என படங்கள் தயாராகிவருகிறது. ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவர் அணிந்திருந்த கவர்ச்சியான உடை விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் தற்போது புகை பிடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதை அதிகம் லைக் செய்திருந்தாலும் புகைப்பிடிப்பதை தடுக்கும் சினிமா படங்களில் நடிப்பவர்களே இப்படி செய்யலாமா என விமர்சித்துள்ளார்கள். இதனை கண்ட ரசிகர்கள் கணவரை பிரிந்து அமலாபால் இது போன்று செய்வதற்கதுதானா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.