அவளை பார்த்தவுடன் காதலில் விழுந்தேன்: முதல் முறையாக மனம் திறந்த நடிகர் விஷால்..!! வெளியிட்ட புகைப்படம் உள்ளே

காதலில் விழுந்த தருணம் குறித்து நடிகர் விஷால் முதல் முறையாக பகிர்ந்துள்ளார். விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா என்பவருக்கும் விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருக்கிறது. விஷால் கூறியதாவது, விசாகப்பட்டினத்தில் ’அயோக்யா’ பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது அறிமுகமானார் அனிஷா. பார்த்ததுமே பிடித்துப் போனது. அவரை கடவுள் அனுப்பியதாக நினைத்துக் கொண்டேன். பின்னர் நண்பர்களாக பழகினோம், நாளடைவில் அவரை நான் காதலிக்க ஆரம்பித்தேன். நான்தான் காதலைச் சொன்னேன். அவர் உடனே சம்மதம் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து சம்மதம் சொன்னார். அனிஷா, தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனை. சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அவரது வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு புலியை தூங்க செய்வதற்கான பயிற்சியளித்தார். அது தொடர்பான நடத்தை பயிற்சியை அவர் கற்றிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மார்ச் மாதம் எங்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கும். நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின் திருமணம் நடக்கும் என்று கூறியுள்ளார்.