கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு அதிகம் பிரபலமடைந்தவர் ரைசா தான். மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தொகுப்பாளியாக பங்குபெற்று வரும் ”நிகழ்ச்சியில் ரைஸா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் பங்குபெற்றனர். அப்போது ஸ்ருதி ஹாசன் ரேசாவிடம் சில கேள்விகளை கேட்டார்.
அதில் ரைசாவிடம், நீங்கள் டீ டோட்டலரா(அதாவது புகை, மது என்று எந்த பழக்கமும் இல்லாதவர்) என்று ஸ்ருதி ஹாசன் கேட்டதற்கு இல்லை என்று கூலாக பதிலளித்தார். மேலும், நீங்கள் ஆண்களுடன் flirt செய்துள்ளீர்களா என்று கேட்டதற்கும் நிறைய ஆண்களுடன் flirt செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் ரைசா. நான் மாடல் என்பதால் வெளியூரில் ஷூட் நடக்கும் அதனால் flirt நடந்துள்ளது என்று கூறியுள்ளார் ரைசா.
இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பெரும்பாலான போட்டியாளர்களில் நிறைய பேருக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. அதே போல காதல் என்ற பெயரில் சிலர் கேவலமாகவும் நடந்து கொண்டனர்.
ஆனால், முதல் சீசனில் பங்குபெற்ற அனைவரும் ஒழிக்கமாணவர்கள் என்று தான் நினைத்திருந்தனர். அப்படி இருக்க நடிகை ரைசா இவ்வாறு கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.