இப்போதெல்லாம் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் கணவன், மனைவிக்கு இடையே ஒரு வெறுமை ஏற்பட்டுவிடுகிறது. சமூக வலைதளங்கள், இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓர் இன்பத்தையோ துன்பத்தையோ முழுமையாக, உணர்வுபூர்வமாக அனுபவிக்கவிடாமல் அடுத்தடுத்து மனதை ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய விஷயங்கள் உருவாகிவிட்டன.
கணவனோ மனைவியோ ஒருவருக்கு ஒருவர் கட்டாயத் தேவை இல்லை என்ற நிலைமை உருவாகிவிட்டது. ஒருவருக்கொருவர் கொடுக்கக்கூடிய விஷயங்கள் வெவ்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு வடிவத்தில் அவர்களுக்குக் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் மனைவியை வசப்படுத்தி கணவன்- மனைவி ஒருவருக்கு ஒருவர் அந்யோன்யமானவராக ஆக என்ன செய்யலாம் என்பதற்கான சிறுசிறு தந்திரங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..
அலுவலகம் முடிந்து வீடு திரும்பும்போது, போனில் அழைத்து, அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை கூறி.., அதை வாங்கி வரவா என கேட்பது அவர்களை மகிழ்விக்கும்.மனைவியின் பிறந்த நாள், குழந்தைகள் பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை ஞாபகத்தில் வைத்து கொண்டு பரிசுப் பொருள்களை வாங்கி கொடுத்து அசத்துங்கள். இதன் மூலம் உங்கள் மீது மரியாதையும் பாசமும் கூடும்.
புதிதாக ஒரு டிரெஸ் மனைவி அணிந்திருந்தால்., உடனே பாராட்டு தெரிவியுங்கள். இந்த டிரஸ்-ல் நீ ரொம்ப அழகாக இருக்க என்று சொல்லி பாருங்கள். உங்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்கும். சில நேரங்களில் பொய் சொல்லித்தான் ஆகவேண்டும்.
எப்பொழுதும் முகத்தை கோபமாக வைத்து கொள்ளாமல், அவ்வப்போது அல்லது மனைவியை பார்க்கும் போதாவது சிரித்து வையுங்கள்.விடுமுறை நாட்களில் உங்களுக்கு தெரிந்த உணவு வகைகளை சமைத்து அசத்துங்கள்.
சமையலறை சாமான்களை கவனித்து தீரும் நிலையில் உள்ள மளிகைப் பொருட்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு நாளாவது ஓட்டல், சினிமா, பார்க், பீச் என்று வெளியிடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.
எப்பவுமே அம்மாவை தொந்தரவு செய்து வேலைவாங்கும் குழந்தைகளை ஒரு இரண்டு மணிநேரம் உங்க கண்காணிப்பில் வைத்து கொள்ளுங்கள்.முடி எப்படியிருக்கு, சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? உனக்கு பிடிச்சிருக்கா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளணும்.
வேலைக்கு செல்லும் மனைவி தனது எதிர்பாலின நட்பைப் பற்றி பேசும்போது அதைக் காதுகொடுத்துக் கேளுங்கள். மனைவி தன் தோழன் பற்றியோ, கணவர் தன் தோழி பற்றியோ பேசும்போது அவர் தன் இணையின் ரியாக்ஷனை கூர்ந்து கவனிப்பார். ‘இவள்/ இவன் நாம் சொல்வதை சரியான நோக்கத்தில் எடுத்துக் கொள்கிறானா. அல்லது நாம் பேசுவது பிடிக்கவில்லையா என்று பார்ப்பார்.
அப்போது கேட்பவர் எரிச்சலான அல்லது சலிப்பான முகபாவனையை வெளிப்படுத்தினால் சுருண்டுவிடுவார். அதற்கு இடம் கொடுக்காமல், அவர் பேசுவதை ஆர்வமாகக் கேளுங்கள், சிரியுங்கள். “ஏன் தேவையில்லாத விஷயத்த எல்லாம் ஆபீஸ்ல டிஸ்கஸ் பண்ற” என்று சொல்லிவிட கூடாது.
குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்த்தால் பெரிதாக தோன்றாது.ஆக மொத்தம் வாயை திறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது என்று சொல்கிறீர்களா..?என்று கேட்டால் வேறு வழியில்லை ஏனெனில்
ஒரு காலத்தில் பெண்ணை அடிமையாக வீட்டுக்குள்ளே வைத்திருந்த சமூகநிலை இருந்தது. ஆண், பெண் திருமணம் செய்துகொண்டாலே, பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ பிரியத்தோடு இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்.
ஆனால் இக்காலத்தில் இந்த சமூகநிலைகள் அனைத்திலும் மாற்றம் நேர்ந்திருக்கிறது. பெண் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டாள்.இந்த மாற்றநிலையில் கணவன் மனைவி உறவு என்பதை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும்.